/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் 32 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க முடிவு
/
மாவட்டத்தில் 32 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க முடிவு
மாவட்டத்தில் 32 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க முடிவு
மாவட்டத்தில் 32 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க முடிவு
ADDED : பிப் 15, 2025 06:46 AM
சிவகங்கை : மாவட்டத்தில் 32 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கு பிப்., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் போதிய பஸ் வசதிகள்இல்லாத குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தும் நோக்கில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், சிவகங்கை கோட்ட பொறியாளர், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன்படி 32 வழித்தடங்கள் போதிய பஸ் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களாக கண்டறிந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தில் ரூ.1600 கட்டணம் செலுத்தி, முகவரி சான்று, கால அட்டவணை, வழித்தட வரைபட, சாலை தகுதி சான்றுடன் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பிப்., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.