தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அலங்கார குளம் துாரெடுக்கும் பணி துவக்கம்

அலங்கார குளம் துாரெடுக்கும் பணி துவக்கம்

அலங்கார குளம் துாரெடுக்கும் பணி துவக்கம்


ADDED : செப் 12, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை, செப்.13-

மானாமதுரை அருகே உள்ள அலங்கார குளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துார்வாரும் பணி துவங்கியது.

மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் முளைப்பாரி உற்சவ விழாக்களின் போது ஊர்வலமாக கொண்டு வரப்படும் முளைப்பாரிகளை இக்குளத்தில் கரைப்பது வழக்கம். அதேபோல வருடந் தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும் இக்குளத்தில் தான் கரைத்து வருகின்றனர். ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழாவின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவமும் இக்குளத்தில் தான் நடைபெற்று வருகிறது.

இக்குளத்தில் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் குப்பை கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் குளத்தில் கிடந்த குப்பை, செடியை அகற்றும் பணியை துவக்கி வைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளங்களை தூர்வார திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளதால் அலங்கார குளம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து குளங்களும் முழுமையாக தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us