ADDED : ஜூலை 13, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நாய்களிடம் இருந்து தப்பி வீட்டுக்குள் புகுந்த மான் குட்டி மீடகப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அ.காளாப்பூர் வி.நகரில் நேற்று தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று தனது 3 மாத குட்டியுடன் வந்தது. அப்போது நாய்கள் துரத்தவே, தாய் மான் தப்பி காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டது. ஆனால் மான்குட்டி வேலியை தாண்ட முடியாமல் பயத்தில் அப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது வீட்டுக்குள் புகுந்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாய்களை விரட்டி விட்டு, மான் குட்டியை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மானை காட்டு பகுதியில் விட்டனர்.