/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

ADDED : ஜூலை 13, 2025 11:16 PM
சிவகங்கை: தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன்களை வழங்க வேண்டும் என சிவகங்கையில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அரசாணை 23 படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைதர ஊதியம் ரூ.5,400 பெற்று, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றதற்காக தவறான தணிக்கை தடைகளை விதித்து லட்சக்கணக்கில் பணத்தை திரும்ப செலுத்த உத்தரவிட்டதால், ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அரசின் தவறான தணிக்கை தடையை நீக்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 17 மற்றும் 18 ல் நடக்கும் டிட்டோஜாக் மறியல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம், என்றார்.