தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பட்ட வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்ட வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்ட வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 16, 2026 05:17 PM

ADDED : அக் 16, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:17 PM ADDED : அக் 16, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி ஐந்து விளக்கில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி கழனிவாசலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 900 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளுக்கு வீரையன் கண்மாய், குறிச்சி கண்மாய், ஆதிதிராவிடர் கண்மாய், மனக்காட்டு கண்மாய், குடிகாத்தான் கண்மாய் உட்பட 9 நீர்நிலைகளில் உள்ள

பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியிருப்புகளை 15 நாட்களில் காலி செய்ய வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கும் பணி நடந்தது. ஆனால் தற்போது குடியிருக்கும் பகுதியிலேயே பட்டா வழங்கக் கோரியும், காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் நேற்று வீரியான் கண்மாய் பகுதி மக்கள் காரைக்குடி ஐந்து விளக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு கட்சியினர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அப் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us