/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேளாண் அலுவலக கட்டடம் இடம் ஒதுக்குவதில் தாமதம்
/
வேளாண் அலுவலக கட்டடம் இடம் ஒதுக்குவதில் தாமதம்
ADDED : ஏப் 01, 2025 06:18 AM
சிங்கம்புணரி:' சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டடத்திற்கு இடம் ஒதுக்க தாமதம் ஏற்படுவதால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் செயல்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தின் கூரை, சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற நிலையில் உள்ளது.
ஆபத்தான நிலையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவானது.
இதற்காக இடம் அளந்து கொடுப்பது தாமதமாகி வருகிறது. விரைவாக இடத்தை ஒதுக்கித்தந்து புதிய கட்டடம் கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.