/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கட்டிய கடைகளை திறப்பதில்.. இழுபறி: நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரை விரயம்

ADDED : ஆக 30, 2025 11:42 PM

சிவகங்கை நேரு பஜாரில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.49 கோடியில் தினசரி சந்தைக்கான கடைகள் கட்டப்பட்டன. அந்த வகையில் இங்கு 90 கடைகள் வரை கட்டினர்.
கட்டிய கடைகளை ஏலம் மூலம் வாடகைக்கு விட பிப்., 6 மற்றும் 18, மார்ச் 5, ஆக., 19 ஆகிய நாட்களில் முயற்சித்தனர். கடைக்கு ரூ.1 லட்சம் வரை வைப்பு தொகையாக செலுத்த தீர்மானித்தனர். இதனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து வைப்பு தொகையை ரூ.50 ஆயிரமாக குறைத்தனர். அந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்காததால், தொடர்ந்து ஏலம் விடும் பணியை நகராட்சி நிர்வாகம் ஒத்திவைத்தே வருகிறது. இதுபோன்று பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு பகுதி விரிவாக்கம் ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்- ல் தொடங்கியது.
இந்தபணிகளும் நீண்ட இழுபறிக்கு பின் கட்டப்பட்டது. அதில் 18 கடைகள், கழிப்பறை கட்டினர். இப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். அதற்கு பின்னரும் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள 18 கடைகளை ஏலம் விட்டு, வியாபாரம் நடத்துவதற்கான நட வடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் சிலர் நீதிமன்றம் சென்றதால், கடைகளை ஏலம் விடுவதில் நகராட்சி துரிதம் காட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று சிவகங்கை நகராட்சியில் தினசரி சந்தை கடை, பஸ் ஸ்டாண்ட் கடைகள் ரூ.5.44 கோடிக்கு கட்டி பல மாதங்களான நிலையில், அந்த கடைகளை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.