/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஹிந்தி பெயர் அழிப்பு
/
நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஹிந்தி பெயர் அழிப்பு
ADDED : செப் 05, 2025 11:50 PM

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மும்மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையில் சில இடங்களில் ஹிந்தியில் எழுதியது அழிக்கப்பட்டுள்ளது.
திருப்புத்துார் வழியாக செல்லும் திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் முன்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் ஊர் பெயர் பலகைகள் இருந்தன. அண்மையில் ஹிந்தி மொழியையும் சேர்த்து மும்மொழியில் ஊர் எழுதப்பட்டிருந்தன. அதில் திருக்கோஷ்டியூரை அடுத்துள்ள கிராமங்களில் பெயர் பலகைகளில் ஹிந்தி மொழி மீது கருப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது.
இப்பகுதியில் பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் தேசிய அளவில் சுற்றுலாத்தலமாக வளர்ந்து வரும் நிலையில், ஹிந்தி பெயர்பலகைகள் அவசியமாகியுள்ளன. ஹிந்தி பெயர்பலகைகள் சிலரால் அழிக்கப்பட்டுள்ளன.