/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்
/
கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்
ADDED : செப் 25, 2025 05:09 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 30 வருடங்களுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு அத்தொட்டி மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அத்தொட்டிக்கு அருகில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சேதமடைந்த பழைய குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ரமேஷ் கண்ணன்,முத்துக்குமரன் ஆகியோர் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.