நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டி.எஸ்.பி., பிரதீப், முதல்வர் ஜபருல்லாகான், டாக்டர் கார்த்திகேயன், பேராசிரியர் நாசர், நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் பாத்திமா கனி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.