/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றம்
/
மானாமதுரை அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றம்
மானாமதுரை அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றம்
மானாமதுரை அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றம்
ADDED : மார் 16, 2025 12:47 AM

மானாமதுரை; மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 6 மாதமாக டாக்டர்கள் பற்றாக்குறையினால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் மாலை 4:00 மணிக்கு மேல் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்களே மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இம்மருத்துவமனை கட்டடங்கள் கட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் ஏராளமான இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 15வது நிதி குழு ஆணைய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ. 3.50 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக தற்போது மருத்துவமனை ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் நிற்க பயன்படுத்தப்படும் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.