
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லதா கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உடையனசாமி பேசினர்.