/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2024 06:29 AM

சிவகங்கை: சிவகங்கையில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு முடிவுபடி நாடு முழுவதும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட துணை தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லதா, தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி,மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர்.
மாவட்ட துணை தலைவர்கள் மூவேந்தன், வினோத்ராஜா, இணை செயலாளர்கள் சின்னப்பன், பயாஸ் அகமது, தணிக்கையாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.