ADDED : செப் 25, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை ஆர்.டி.ஓ., அலுவலகமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடியில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாகன ஓட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வலியுறுத்தியும் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை ஆர்.டி.ஓ., அலுவலகமாக தரம் உயர்த்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் குமாரவேல் தலைமை ஏற்றார். நகரத் தலைவர் சுப்பிரமணியன் நகரச் செயலாளர் வெங்கிடு, நகரப் பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.