ADDED : ஜன 09, 2024 12:25 AM

சாலைக்கிராமம், : சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இளையான்குடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜபிரதீப் தலைமை தாங்கினார். பூலாங்குடி ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், சாலைக்கிராமம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், சாலைக்கிராம பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும், பிரதமமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் சிறுபாலை முதல் அரியாண்டிபுரம் கிராமத்தை இணைக்கும் சாலை பணி தாமதம் கண்டித்தும் அலுவலர்களின் அலட்சியத்தால் காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், கோட்டையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓ.பி. சி.,அணி மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், பிரச்சார அணி மாவட்ட தலைவர் அங்குசாமி, ஓ.பி.சி., அணி மாவட்ட துணை தலைவர் சீதா லெட்சுமி, பாலா, இளங்கோ, பொன்முடி, பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.