நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றியத்தை சேர்ந்த சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய பணியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க தலைவர் ராமநாதன் தலைமையில் கண்ணங்குடி தலைவர் சண்முகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அங்கன்வாடி ஊழியர்கள் மாநில மாநாட்டில் நிறைவேற்றி தருவதாக கூறிய உறுதிமொழி படி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் நிரந்தரமாக்குதல், காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.