ADDED : ஆக 22, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.23-
சிவகங்கை அரண்மனை வாசலில் தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட குழு மெய்யப்பன், ஒன்றிய செயலாளர் ராசு, செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, அழகர்சாமி, ரோகிணி, ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
