ADDED : செப் 29, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின் வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்ட தலைவர் சாத்தையா தலைமை வகித்தார். களப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரம் பேரை எடுக்கும் அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும், கணக்கீட்டு பணிக்கு ஒப்பந்த அடிப்படை திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
