ADDED : செப் 29, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை கனிம வள புவியியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் அரளிக்கோட்டை முதல் கீழ வளவு செல்லும் ரோட்டில் கணேசபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி வண்டல் மண் எடுத்து வந்த டிராக்டர்களை மடக்கிய போது, டிரைவர்கள் தப்பி னர். கனிம வள அதிகாரிகள் திருக்கோஷ்டியூர் போலீசில் டிராக்டர்களை ஒப் படைத்தனர்.
* தேவகோட்டை அருகே தத்தணி முருகேசன் மகன் சந்தோஷ் குமார்.34., ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் அப்பகுதி வி.ஏ.ஓ. தனசேகரன் ஆய்வு செய்தார். டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதை கண்டு பிடித்து போலீசில் புகார் செய்தார்.
தாலுகா போலீசார் சந்தோஷ் குமாரை கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக் டரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
