UPDATED : அக் 15, 2026 04:53 PM
ADDED : அக் 15, 2026 04:39 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மண்டல நிர்வாகி சுப்பிரமணியன் துவக்க உரை ஆற்றினார். அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் ஜெயக்குமார், பொறியாளர் சங்க நிர்வாகி வினோத்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்புராம், மோகனசுந்தரம், மல்லிகாராஜா, சாத்தையா, காளிமுத்தன், ஆனந்தன், ஜெயக்குமார் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மண்டல தலைவர் உமாநாத் நிறைவுரை ஆற்றினார். ////
