நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி 20 வயது மாணவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மீனாட்சி நகர், இந்திராநகர், அகிலாண்டபுரம், சி.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதித்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.