/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
/
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
ADDED : நவ 16, 2025 04:15 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
இப்பேரூராட்சிக்கான புதிய அலுவலக கட்டடம் ரூ. ஒரு கோடி செலவில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி முன்னிலையில் நேற்று நடந்தது. பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றனர். துணை முதல்வர் உதயநிதி, கட்டடத்தை திறந்து வைத்தார்.
அங்கிருந்தே மேலுார் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரணி அரங்க பெயர் பலகையையும் திறந்தார். விழாவில் அமைச்சர்கள், கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கிருங்காக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.தென்னரசு சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து திண்டுக்கல் ரோட்டில் அண்ணாதுரை மன்றம், அதன் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் செ.மாதவன் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் பூமணி, பாலசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சிவபுரி சேகர், முத்துக்குமார், நகர செயலாளர் கதிர்வேல், துரைமாறன், சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், டாக்டர் அருள்மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், கவுன்சிலர்கள் ஜெயக்குமார், வள்ளி மனோகரன், தொழிலதிபர்கள் ரகு பாண்டியன், ரமேஷ் பாண்டியன், ராஜ பாண்டியன், கே.ஆர்.ஏ.கணேசன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எம்.சுரேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு, நகர பொருளாளர் செந்தில்கிருஷ்ணன், ராஜாங்கம், பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் அமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

