/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நாளை 465 பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி நலத்திட்டம் வழங்கல்
/
சிவகங்கையில் நாளை 465 பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி நலத்திட்டம் வழங்கல்
சிவகங்கையில் நாளை 465 பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி நலத்திட்டம் வழங்கல்
சிவகங்கையில் நாளை 465 பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி நலத்திட்டம் வழங்கல்
ADDED : ஜூன் 15, 2025 10:59 PM
சிவகங்கை; சிவகங்கையில் 465 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு, திருப்புவனத்தில் நாளை காலை 10:00 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகின்றன.
துணை முதல்வர் உதயநிதி நாளை மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக சிவகங்கைக்கு வருகிறார். நாளை காலை 10:00மணிக்கு திருப்புவனத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து கானுாரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை பார்வையிடுகிறார். அங்கிருந்து சிவகங்கை அருகே சோழபுரத்தில் நடக்கும் வேலை உறுதி திட்டபணிகளை அன்று காலை 11:30 மணிக்கு ஆய்வு செய்கிறார். மதியம் 12:10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் 465 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. துணை முதல்வர் உதயநிதி மகளிர் குழு கடன், வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம் என 19 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மதியம் 2:10 மணிக்கு வேலுநாச்சியார் விடுதியில் தங்கி மதிய உணவு எடுத்து, மாலை 4:00 மணிக்கு திருப்புத்துார் நோக்கி செல்கிறார். திருப்புத்துார் ஆர்.கே., மகாலில் மாலை 4:30 மணிக்கு இளைஞரணியினர் சார்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து மாலை 5:25 மணி வரை தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்துவிட்டு, மதுரைக்கு புறப்படுகிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.