/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரியில் துணை இயக்குநர் ஆய்வு
/
மருத்துவக் கல்லுாரியில் துணை இயக்குநர் ஆய்வு
ADDED : நவ 28, 2024 05:16 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) வெள்ளசாமி ஆய்வு செய்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துணை இயக்குநர் தலைமையில் பையிண்ட் இந்தியா, சேர் இந்தியா, உலக நலவியல் நிறுவனம் அடங்கிய குழுவினர் காசநோய் ஒழிப்பு தொடர்பான சேவைகளை மேம்படுத்தும் வண்ணம் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு தொடர்பான சேவைகளை மேம்படுத்திடவும், சிவகங்கை மாவட்டத்தில் காசநோய் பாதிப்பை குறைக்கும் பொருட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்தியபாமா, மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன், காசநோய் பொறுப்பு பேராசிரியர் டாக்டர் தங்கத்துரை, துணை நிலைய மருத்துவர் முகமதுரபி, பையிண்ட் இந்தியா டாக்டர் அங்கிதாஸ்ரீவாஸ்தவா, டாக்டர் ஜகதீஸ் பாண்டா, சேர் இந்தியா சாந்தினிஸ்ரீனிவாசன், உலக நலவியல் நிறுவனம் டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.