/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தவிப்பு: அடிப்படை வசதி கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு
/
தவிப்பு: அடிப்படை வசதி கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு
தவிப்பு: அடிப்படை வசதி கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு
தவிப்பு: அடிப்படை வசதி கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:56 PM

பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதும், பாரியாண்ட பறம்புமலை என்று போற்றப்படுவதுமான பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டது.
மலையடிவாரத்தில் மூன்று அடுக்குகளாக உள்ள இக்கோயிலுக்கும், மலை உச்சியில் உள்ள முருகன், விநாயகர், கோயில், தர்காவுக்கும் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்தும் இங்கு அடிப்படை வசதி முறையாக செய்து தரப்படவில்லை. கோயில் அருகே ஊராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை திருவிழா நாட்களில் கூட திறக்கப்படுவது கிடையாது. நேர்த்திக்கடனுக்காக மொட்டை போடுபவர்கள் அருகில் உள்ள அசுத்த நீர் கலந்த ஊருணியில் குளித்து செல்கின்றனர்.
வெளியூர்களிலிருந்து முதல் நாள் வந்து தங்குவதற்கு இங்கு தங்கும் விடுதி எதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விடுதி இடிந்து பாம்புகளின் புகலிடமாகி விட்டது.
5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் முக்கிய தொழில் கிராமமான இங்கு எந்த ஒரு வங்கி வசதியும் இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து இங்கு வருபவர்கள் ஒரே ஒரு தனியார் ஏ.டி.எம்., ஐ மட்டுமே நம்பியுள்ளனர்.
அதில் குறைந்த தொகை மட்டுமே எடுக்க முடியும். பல நாட்கள் வேலை செய்வதும் இல்லை. இங்கு பஸ் நிலையம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றுவரை ரோட்டோரத்திலேயே வெயில் மழையில் காத்திருந்து பயணிகள் பஸ் ஏறும் அவலம் உள்ளது. காந்தி நகர் அருகே கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் புதர் மூடி கிடக்கிறது.
எனவே பக்தர்கள் வசதிக்காக கழிப்பறை, குளியலறை, தங்கும் விடுதி, வங்கி, ஏ.டி.எம்., உள்ளிட்ட வசதிகளை விரைந்து செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.