/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் பராமரிப்பில்லாத தேவகோட்டை அழகப்பா பூங்கா
/
தொடர் பராமரிப்பில்லாத தேவகோட்டை அழகப்பா பூங்கா
ADDED : மே 02, 2025 06:24 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் அழகப்பா பூங்கா பராமரிப்பு இன்றி வனமாக மாறி வருகிறது.
தேவகோட்டை அழகாபுரி நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஏக்கரில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடியில் பூங்கா அமைக்கப்பட்டது.
பிரமாண்ட பொம்மைகள், சிறுவர்கள் விளையாட கருவி, நீரூற்று அமைத்தனர். தரையில் அமர புற்களை பூங்கா முழுவதும் நகராட்சியினர் உருவாக்கினர்.
காலப்போக்கில் பராமரிப்பு இன்றி பொருட்கள் வீணாக துவங்கியது. சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தது. பின்னர் அழகப்பா பூங்கா பராமரிப்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆரம்பத்தில் தனியாரும் சில பணிகளை மேற்கொண்டனர். ஆனால் மீண்டும் பூங்கா பராமரிப்பு இன்றி போனது.
இரும்பு சேர் மட்டுமே அமர்ந்து பேசும் நிலையில் உள்ளது. பூங்காவின் கிழக்கு, தெற்கு பகுதி முற்றிலும் முட்புதர் மண்டிக் கிடக்கிறது.
ஏற்கனவே 2 ரூபாய், 5 ரூபாய் என கட்டணம் வசூலித்த நிலையில் தற்போது 10 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகரில் இருக்கும் ஒரே பொழுது போக்கு மையமான அழகப்பா பூங்காவில் உள்ள முட்புதரை அகற்ற வேண்டும். கோடையின் தாக்கத்தை தடுக்க எல்லா நீருற்றுகளையும் கூடுதல் நேரம் இயக்க வேண்டும். புல் தரைகளை உருவாக்க வேண்டும். பூங்கா உள்ளே கடைகள் ஏற்படுத்த வேண்டும். போதிய விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நகராட்சியினர் செய்வார்களா.

