/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் வளர்ச்சிப் பணி ஆய்வு
/
மானாமதுரையில் வளர்ச்சிப் பணி ஆய்வு
ADDED : ஜன 02, 2025 11:51 PM

மானாமதுரை; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.1.10 கோடி செலவில் நடைபெற்று வரும் பணி, நகராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள், ரூ.38 கோடி செலவில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் ஆறுமுகம்,பொறியாளர் பட்டுராஜன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஊழியர்கள் இருந்தனர்.

