/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி
/
திருப்புத்துார் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி
திருப்புத்துார் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி
திருப்புத்துார் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி
ADDED : டிச 25, 2024 08:11 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றிய கிராமங்களில் ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் நிறைவுற்ற கட்டடங்களை திறந்து வைத்தார்.
காக்காளிப்பட்டி துவக்கப்பள்ளியில் ரூ.47.96 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறை, திருவுடையார்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை, உடையநாதபுரத்தில் ரூ 7 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற் கூடம், பையூரில் 9.77 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம், வடக்கூரில் ரூ 16.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், சென்னல்குடியில் ரூ.30.1 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம், ஆவிணிப்பட்டியில் ரூ 7 லட்சம், கீரணிப்பட்டியில் ரூ.6 லட்சத்தில் நிழற் குடைகளை திறந்து வைத்தார்.
மேலும், செவ்வூரில் ரூ.2.57 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம், சேவினிப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ரூ.8.5 லட்சத்தில் நாடக மேடை,- வையகளத்துார் சுண்டக்காடு ஊராட்சிக்கு ரூ.42.65 லட்சம் மதிப்பில் கிராம செயலக கட்டடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். திட்ட இயக்குநர் வானதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், பி.டி.ஓ.க்கள் ராஜேந்திர குமார், காதர் மொய்தீன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.