/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருளில் மூழ்கிய கோயில் வளாகம் அச்சத்தில் தவிக்கும் பக்தர்கள்
/
இருளில் மூழ்கிய கோயில் வளாகம் அச்சத்தில் தவிக்கும் பக்தர்கள்
இருளில் மூழ்கிய கோயில் வளாகம் அச்சத்தில் தவிக்கும் பக்தர்கள்
இருளில் மூழ்கிய கோயில் வளாகம் அச்சத்தில் தவிக்கும் பக்தர்கள்
ADDED : ஜூன் 08, 2025 05:29 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் திருவிழாவின் போது கோயிலை சுற்றி போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாததால் அப்பகுதி இருளில் மூழ்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா நடந்து வரும் நிலையில் கோயிலைச் சுற்றி ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் போடப்பட்டுள்ளன. இரவு முழுவதும் திருவிழா நடந்து வரும் நிலையில் கலை நிகழ்ச்சி நடத்த இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே போலீசார் அனுமதித்துள்ளனர்.
சுவாமி ஊர்வலம் உள்ளிட்ட வழிபாடு இரவு முழுவதும் உண்டு. இரவு 11:30 மணிக்கு கோயிலை சுற்றியுள்ள அனைத்து ராட்டினம், பொழுதுபோக்கு அம்சங்களை மூட போலீசார் உத்தரவிட்டதால், அனைத்து மின் விளக்குகளையும் அதன் உரிமையாளர்கள் அணைத்து விட்டனர். அருகே இருந்த கடைகளிலும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டது. இரவு முழுவதும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் நிலையில் பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அச்சமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு கழுவன் திருவிழா நடைபெற்ற போது 11:30 மணிக்கு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் சென்றனர்.
கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களில் செய்யப்பட்டிருக்கும் மின் விளக்குகளை நம்பி கோயில் நிர்வாகம் மின்விளக்கு ஏற்பாடு செய்யாமல் விட்டதே இதற்கு காரணம்.
மேலும் போலீசார் பொழுதுபோக்கு அம்சங்களை நிறுத்த சொல்லும் போது மின்விளக்குகளையும் அணைத்து விட்டனர். இன்னும் 2 நாட்கள் நடக்கும் திருவிழாவின் போதாவது கோயிலை சுற்றிய பகுதி இருளில் மூழ்காதவாறு மின்விளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.