/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காணும் பொங்கல் மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
/
காணும் பொங்கல் மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 17, 2025 05:22 AM

திருப்புவனம்: காணும் பொங்கலை ஒட்டி நேற்று பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. கிராமப்புற விவசாயிகள் காணும் பொங்கலன்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம், நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வாகனங்களில் வந்து குவிந்தனர்.
நேர்த்திக்கடன் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.