/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துமாரியம்மன் கோயில் விழா துவக்கம்; தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ADDED : மார் 15, 2024 11:55 PM

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி, பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் மண் சோறு சாப்பிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இங்கு 68வது மாசி, பங்குனி திருவிழா மார்ச் 12ம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.
மார்ச் 19ம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் மார்ச் 20ம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் , பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
காப்பு கட்டிய நாள் முதலே பக்தர்கள் தினமும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமையான, நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குழந்தை வரம் வேண்டியும் நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டியும் பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.