/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு
/
தாயமங்கலம் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு
தாயமங்கலம் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு
தாயமங்கலம் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 18, 2025 06:09 AM

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவிற்காக நடந்த பிடிமண் வழிபாடு நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 22 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் விழா வரும் பங்குனி 15ம் தேதி இரவு 10:20 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பங்குனி பொங்கல் விழா பங்குனி 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கு முன்னதாக பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றன. விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பங்குனி துவங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை,மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.