/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதிய அடிப்படை வசதி இன்றி மடப்புரத்தில் பக்தர்கள் அவதி
/
போதிய அடிப்படை வசதி இன்றி மடப்புரத்தில் பக்தர்கள் அவதி
போதிய அடிப்படை வசதி இன்றி மடப்புரத்தில் பக்தர்கள் அவதி
போதிய அடிப்படை வசதி இன்றி மடப்புரத்தில் பக்தர்கள் அவதி
ADDED : ஜூலை 19, 2025 11:43 PM
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பெண் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்யாததால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தமிழக அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி பிரசித்தி பெற்றது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள், ஆடி வெள்ளி போன்ற தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் தடுப்பு கட்டி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.
வருவாய்க்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தருவதில்லை.
ஆடி வெள்ளியன்று 25 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்களுக்கு மொத்தமே 20 கழிப்பறை தான் உள்ளது.
இதிலும் பல கழிப்பறையில் கதவு உடைந்த நிலையில் சுகாதாரம் இல்லாமல் உள்ளது.
25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் கோயிலில் தற்காலிக கழிப்பறை கூடவைக்கப்படவில்லை.
அய்யனார் மண்டபம் அருகே 10 கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால் துர்நாற்றத்துடன் சுகாதார கேடும் நிலவியது.
இதனால் பெண் பக்தர்கள் பலரும் இயற்கை உபாதைக்காக வைகை ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றவை, வரும் வெள்ளியன்று பக்தர்கள் அதிகளவில் வருவார்கள், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.