/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்
/
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்
ADDED : மார் 23, 2025 07:36 AM
திருப்புவனம் : திருப்புவனம் மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ப்ளக்ஸ் போர்டு வைத்திருப்பதால் காற்றோட்டம் இல்லாமல் மூச்சு திணறலால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அதிகாலை நான்கு மணி முதல் பக்தர்கள் கோயிலுக்கு வர தொடங்குகின்றனர்.
பக்தர்கள் அக்னிசட்டி, பொம்மை,ஆயிரம் கண்பானை, பால்குடம் ஏந்தி அம்மனுக்கு செலுத்துவார்கள், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கோயில் வளாகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தென்னங்கீற்று கொட்டகையும் போடப்பட்டுள்ளது.
கோயிலின் உட்புறத்தை சுற்றி பல இடங்களில் வணிக நிறுவனங்கள் உட்பட பலரும் பிளக்ஸ் போர்டுகள் நெருக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் உட்புற காற்று வெளியேறவே இல்லை. ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலினுள் செல்லும் போது வெளிக்காற்று வராமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழும் நிலை ஏற்படும்.
கோயில் வளாகத்தில் அக்னிசட்டி செலுத்தும் இடத்தில் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும், அக்னிசட்டி ஏந்தி வலம் வரும் போது தீப்பொறி பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு, பிளக்ஸ் போர்டு வைக்க இடம் பிடிப்பதிலும் மோதல் உருவாகிறது.
போலீசாரிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பலரும் தன்னிச்சையாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ள நிலையில் கோயிலின் உள்ளே உள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும், பக்தர்கள் நெரிசலின்றி அம்மனை தரிசிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.