/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
மானாமதுரை விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : ஆக 09, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் முளைப்பாரி விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
இக்கோயிலில் பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை வைகை ஆற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடம் எடுத்து வந்தனர். அலகு குத்திய பக்தர்கள் கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வேண்டினர். நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற உள்ளது.