/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி கோயிலுக்கு தருமை ஆதினம் இன்று வருகை
/
இளையான்குடி கோயிலுக்கு தருமை ஆதினம் இன்று வருகை
ADDED : அக் 28, 2025 03:46 AM
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் தருமை ஆதினம் இன்று வழிபாடு செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.வரும் நவ.3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அக்.31ம் தேதி விக்னேஸ்வர பூஜை, முதலாம் கால யாக சாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நவ.3ம் தேதி காலை 6:39 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை யுடன் காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம்,ராஜகோபுரம்,பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபி ஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
பணிகளை தேவஸ்தான நிர்வாகிகள், இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இதனை ஒட்டி இன்று
தருமை ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.

