மானாமதுரை: மானாமதுரையில் இலவசமாக 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தியான மகா உற்ஸவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்,ஹார்ட்புல்னெஸ் சார்பில் இலவச தியான மகா உற்ஸவம் கடந்த 26ம் தேதி முதல் தொடர்ந்து நேற்று வரை 3நாட்கள் நடைபெற்றது .
தியான உற்சவத்தை எம்.எல்.ஏ.,தமிழரசி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் துவக்கி வைத்தனர்.
மூச்சு, தியான பயிற்சி, மனதை ஒரு நிலைப்படுத்துதல் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்கள் நாகராஜன், குமார், சுத்தானந்தம், இந்திராணி, குருநாதன் வழங்கினர். தாசில்தார் ராஜா, ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் கிருஸ்டிராஜ், குட்வில் மெட்ரிக் பள்ளி தாளாளர் பூமிநாதன், செல்வராஜ், சந்திரமோகன், ஓய்வூதியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பாபா மெட்ரிக் பள்ளி தாளாளர் கபிலன் பங்கேற்றனர். பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார்.