ADDED : பிப் 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை சார்பில் டிஜிட்டல் வங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பெத்தாலட்சுமி தலைமையேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பிரவீன் பண பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை அதிகாரிகள் ஹர்ஷிதா மற்றும் ராமகிருஷ்ணன் விக்னேஸ்வரன் கலந்து கொண்டனர், மாணவ மாணவிகளிடையே டிஜிட்டல் வங்கி குறித்தும் டிஜிட்டல் வங்கியின் அவசியம், டிஜிட்டல் வங்கி பாதுகாப்பான வழிமுறைகள், கட்டண முறையிலான மோசடி குறித்து பேசினர். தொழில் நிர்வாகவியல் துறை தலைவர் தியாகராஜன் ஒருங்கிணைத்தார்.