/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
‛டிஜிடல் பயிர் சர்வே' பணி துவங்கியது! 521 வருவாய் கிராமத்தில் 1,098 பேர் ஈடுபாடு
/
‛டிஜிடல் பயிர் சர்வே' பணி துவங்கியது! 521 வருவாய் கிராமத்தில் 1,098 பேர் ஈடுபாடு
‛டிஜிடல் பயிர் சர்வே' பணி துவங்கியது! 521 வருவாய் கிராமத்தில் 1,098 பேர் ஈடுபாடு
‛டிஜிடல் பயிர் சர்வே' பணி துவங்கியது! 521 வருவாய் கிராமத்தில் 1,098 பேர் ஈடுபாடு
ADDED : நவ 13, 2024 09:26 PM

சிவகங்கை ; மாவட்டத்தில் உள்ள 521 வருவாய் கிராமங்களின் கீழ் 17 லட்சத்து 60 ஆயிரம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்துள்ள பயிர்கள் குறித்த ‛டிஜிடல் பயிர் சர்வே' பணியில் 1,098 பேர் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் விவசாயத்திற்கு பயன்படும் நிலப்பரப்பு, விவசாயிகள் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, நிலக்கடலை, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை கணக்கிடும், டிஜிடல் பயிர் சர்வே மாநில அளவில் துவக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 521 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 17 லட்சத்து 60 ஆயிரம் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் இந்த சர்வே பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறையினர், வேளாண் கல்லுாரி மாணவர்களை கொண்டு இந்த சர்வே பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‛கிராப் சர்வே' ஆப்பினை அந்தந்த மாணவர்களின் அலைபேசியில் டவுன் லோட் செய்ய வேண்டும். இந்த ஆப்பின் மூலம் ஜி.பி.ஆர்.எஸ்., மேப் தெரிய வரும். இந்த மேப்பில் காட்டும் நிலங்களில் குழுவினர் சர்வே எடுப்பார்கள். இந்த அலைபேசி ஆப்பில் இருந்து விண்ணப்பம் வரும். அந்த விண்ணப்பத்தில் விவசாயி பெயர், பரப்பளவு, எந்தவிதமான பயிர் நடவு செய்துள்ளார் என்பது போன்ற விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றை சர்வே பணியில் ஈடுபடுவோர் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். இந்த விபரங்கள் அனைத்தும் பிர்க்கா வாரியாக ‛இ- அடங்கல்' திட்டத்தில் சேர்ந்துவிடும். மாநில அளவில் இந்த அடங்கலை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ‛டிஜிடல் பயிர் சர்வே' மூலம் அரசுக்கு விவசாயிகள் எத்தனை ஏக்கரில் எந்தவிதமான பயிர்களை நடவு செய்துள்ளனர். குறிப்பாக ஆண்டுதோறும் பயிரிடப்படும் நெல், கரும்பு, வாழை, காய்கறி, நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் குறித்த விபரங்களை சேகரித்து, அடுத்தகட்டமாக மக்களுக்கு தேவையான பயிர் வகைகள் குறித்து வேளாண்மை துறை ஆராய்ச்சி மேற்கொள்ளும். சிவகங்கை மாவட்டத்தில் 521 வருவாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர் விபரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேளாண்மை, பொறியியல் துறை, தோட்டக்கலை, வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் என 1,098 பேர் ஈடுபட்டுள்ளனர். * கண்காணிப்பு அலுவலர் பார்வையிடல்: ‛டிஜிடல் பயிர் சர்வே' பணியினை சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல் இயக்குனருமான ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள், மதகுபட்டி அருகே தச்சன்புதுப்பட்டியில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா, துணை இயக்குனர் மதுரைச்சாமி, செல்வி, தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி, கலெக்டர் பி.ஏ.,(விவசாயம்) சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ////