/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 'டிஜிட்டல் பயிர் சர்வே' 98.52 சதவீதம் நிறைவு
/
சிவகங்கையில் 'டிஜிட்டல் பயிர் சர்வே' 98.52 சதவீதம் நிறைவு
சிவகங்கையில் 'டிஜிட்டல் பயிர் சர்வே' 98.52 சதவீதம் நிறைவு
சிவகங்கையில் 'டிஜிட்டல் பயிர் சர்வே' 98.52 சதவீதம் நிறைவு
ADDED : நவ 21, 2024 04:36 AM
சிவகங்கை: மாவட்டத்தில் ராபி பருவத்தில் நடவு செய்துள்ள நெல், நிலக்கடலை, கரும்பு, பயறு, காய்கறிகள் குறித்து 98.52 சதவீதம் வரை 'டிஜிட்டல் பயிர் சர்வே' செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் ராபி பருவத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், காய்கறி, பயறு வகைகள் உள்ளிட்டவை குறித்து 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 521 வருவாய் கிராமங்களில் இந்த சர்வே பணி நடைபெற்று வருகிறது.
இந்த வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 16 லட்சத்து 32 ஆயிரத்து 578 உட்பிரிவுகளில் உள்ள நிலங்களுக்கு நேரடியாக சென்று வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், வேளாண் கல்லுாரி மாணவர்களை வைத்து 'டிஜிட்டல் பயிர் சர்வே' மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை இம்மாவட்டத்திற்கு உட்பட்ட 521 வருவாய் கிராமங்களில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 493 உட்பிரிவுகளில் 98.52 சதவீதத்திற்கு 'டிஜிட்டல் பயிர் சர்வே' செய்துள்ளனர்.
இன்னும் 24 ஆயிரத்து 85 உட்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதி நிலங்களில் சர்வே பணி மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

