/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்று
/
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்று
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்று
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்று
ADDED : நவ 14, 2025 04:26 AM
சிவகங்கை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் இல்லங்களிலிருந்தே பயோமெட்ரிக் முக அங்கீகார முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், அலைபேசி எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இயலும் என்றார்.