/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் செய்தி எதிரொலி மாடுகளை பிடித்த நகராட்சி
/
தினமலர் செய்தி எதிரொலி மாடுகளை பிடித்த நகராட்சி
ADDED : டிச 28, 2024 08:04 AM
மானாமதுரை : தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரையில் ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து அடைத்தனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து ரோடுகளிலும் மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி வருகின்றனர். மேலும் மதுரை ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதாகவும் மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை அவ்வப்போது பிடித்தாலும் அதனை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனடியாக மீட்டு விடுவதால் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் தயங்கி வருவதாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஊழியர்கள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ரோடுகளில் சுற்றி திரிந்த மாடுகள் மற்றும் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் இருந்த மாடுகளையும் பிடித்து கட்டி வைத்தனர்.

