/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரியில் இயக்குநர்கள் ஆய்வு
/
மருத்துவக் கல்லுாரியில் இயக்குநர்கள் ஆய்வு
ADDED : மார் 27, 2025 07:04 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவத்துறை கல்வி இயக்கக இயக்குநர்கள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை பயிற்சி பெண் டாக்டர் மர்ம நபரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவத்துறை கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் சாந்தினி, இணை இயக்குநர் சிவராஜ் குழுவினர் ஆய்வு செய்தனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளதா,போதுமான மின் விளக்கு வசதிகள் உள்ளதா.
மாணவர்கள் பயிற்சி டாக்டர்கள் தங்குவதற்கான விடுதியில் முறையான குடிதண்ணீர், படுக்கை கழிப்பிட வசதி உள்ளதா. பயிற்சி டாக்டர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பணிபுரிவதற்கான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததோடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி, நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர் முகமது ரபி, தென்றல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.