/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 08, 2024 05:04 AM

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (பிப்.,9) மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
அன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், தனித்துவ அடையாள அட்டை பதிவு செய்யாதவர்கள், ஆதார் பெறாதவர்கள், மாதாந்திர உதவி, பராமரிப்பு தொகை பெறாதவர்கள், வங்கி கடனுதவி, உபகரண உதவி, இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீடு உள்ளிட்ட உதவிகளை பெற விரும்புவோர் 4 பாஸ்போர்ட் புகைப்படம், ரேஷன், ஆதார் கார்டு, இருப்பிட சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகலுடன் நேரடியாக வந்து பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

