sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

/

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்


ADDED : பிப் 03, 2024 01:38 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தோருக்கு நிதி ஒதுக்கீடு வந்ததும் வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாக,'' தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலர், ஆசிரியர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி அலுவலர், ஆசிரியர்கள் கோரிக்கைபடி 'லிப்ட்' வசதி இல்லாத அலுவலகங்களில், அவர்களை தரைத் தளத்தில் பணிபுரிய வைக்க வேண்டும்.

சாய்தள வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தடையற்ற சூழலை ஏற்படுத்த அரசு தலைமை மருத்துவமனைகள், தாசில்தார் அலுவலகங்கள் என 790 அரசு அலுவலகங்கள், 200 சுற்றுலா தலங்களில் சாய்வு தளங்கள் அமைக்கப்படும்.

வருவாய் துறையில், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கேட்டு 2023 ஆக., முதல் காத்திருப்போருக்கு, அரசு நிதி ஒதுக்கீடு வந்ததும் வழங்கப்படும். இலவச உதவி உபகரணம், 3 சக்கர வாகனம், பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலிகளை கூடுதலாக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊர்ப்புற நுாலகராக சிறப்பு காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை, குறைகளை 'வாட்ஸ் ஆப்' ல் தெரிவிக்க 94999 33703, உதவி மைய எண் 18004 250111 உருவாக்கியுள்ளோம் என மாற்றுத்திறனாளி அரசு அலுவலகம், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி பதில் அளித்துள்ளார்.

இதனால் மாநில அளவில் நடத்துவதாக இருந்த உண்ணாவிரதத்தை கைவிட்டோம் என்றார்.






      Dinamalar
      Follow us