ADDED : ஆக 25, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.26-மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி, பாதுகாப்போர் உரிமை சங்க மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் கொங்கையா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்க பூபதி துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் தவமணி நிறைவுரை ஆற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் மனோகரன், துணை தலைவர் கருப்புச்சாமி, முருகன் ஆகியோர் பேசினர்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன்,முருகேசன்,ஜெயபால்,ராமன் பங்கேற்றனர்.
