/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி இல்லாததால் ஏமாற்றம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி இல்லாததால் ஏமாற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி இல்லாததால் ஏமாற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி இல்லாததால் ஏமாற்றம்
ADDED : ஆக 13, 2024 11:13 PM
சிவகங்கையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் அட்டை பெற்றுள்ளனர். உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட கருவி வழங்க அரசு, ஆண்டுக்கு சிவகங்கைக்கு மட்டுமே ரூ.12 கோடி நிதி ஒதுக்குகிறது.
ஒவ்வொரு மாதமும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பர், இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளி நலக்குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டம் மூலம் அவர்களுக்கான தேவை, வளர்ச்சி குறித்து விவாதித்து, நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக இது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதற்கான எவ்வித பணியும் முறையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக இங்கு, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் இல்லை. புதுக்கோட்டை அலுவலர் தான் கூடுதல் பொறுப்பாக சிவகங்கையை பார்க்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊனமுற்றவர்களுக்கு மாற்றத்தை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தான், மாற்றுத்திறனாளி என அழைத்து, அத்துறைக்கும் பெயர் வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களை செயல்படுத்தினார்.
அவரது திட்டங்கள் இன்றைக்கும் பிற மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், கண்துடைப்பிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, அவர்களின் எதிர்கால தேவை, அவசியம் குறித்து சிந்திப்பதே இல்லை.
ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நலத்திட்டங்களை செய்த மாவட்டத்திற்கான முதல்வரின் விருதை, சுதந்திர தினத்தன்று சிவகங்கை கலெக்டர் பெற்று வந்தார். இந்த ஆண்டு இந்த வாய்ப்பை விருதுநகர் மாவட்டம் தட்டி சென்று விட்டது.