/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நில தானக்கல் சிவகங்கையில் கண்டெடுப்பு
/
நில தானக்கல் சிவகங்கையில் கண்டெடுப்பு
ADDED : மார் 04, 2024 12:27 AM

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குறுமனேந்தலில் சூலம் அடையாளத்துடன் நில தானக்கல் இருப்பதை, காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் கண்ட றிந்து உறுதி செய்தனர். இக்கல், 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது.
இக்கிராமத்திற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டதின் அடையாளமாக இது நடப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
சிவனின் அடையாளமான சூலம் பொறித்த இந்த கல்வெட்டால், கோவில் வளர்ச்சிக்கு சேதுபதி மன்னர்கள் செய்த கொடைகளை அறிய முடிகிறது.
காளையார்கோவில் பகுதியில் பல கல்வெட்டுக்களும், முதுமக்கள் தாழிகளும் இருப்பதால், சிவகங்கையின் மற்றொரு கீழடியாக இப்பகுதியை கருதலாம் என பேராசிரியர்கள் கூறினர்.

