/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை தினசரி மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
/
தேவகோட்டை தினசரி மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
தேவகோட்டை தினசரி மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
தேவகோட்டை தினசரி மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
ADDED : ஆக 06, 2025 08:28 AM
தேவகோட்டை : தினசரி மார்க்கெட் வியாபாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
தேவகோட்டையில் தற்போதைய பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்படுவதால் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக இருக்கிறது.இதனைத் தொடர்ந்து தற்போதைய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள தினசரி மார்க்கெட்டை அகற்றி அந்த இடத்தையும் சேர்த்து ரூ.12 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டவும்,வேறு இடத்தில் ரூ.8 கோடியில் மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.டெண்டர் விடப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
மார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் மார்க்கெட் கட்டி தருமாறு பல கட்ட போராட்டம் நடத்தினர். இதனால் பணி ஆரம்பிப்பதில் தாமதமாகிறது. இந் நிலையில் நேற்று அமைச்சர் பெரியகருப்பன் தேவகோட்டையில் பழைய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், தற்காலிகமாக இரண்டும் செயல்பட உள்ள இடம் , புதிய மார்க்கெட் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் மார்க்கெட் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் உடன் இருந்தார். இதில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கமிஷனர் கண்ணன், பொறியாளர் மீராஅலி, தி.மு.க.கவுன்சிலர் பாலமுருகன் உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பேச்சு வார்த்தையில் ரூ 20 கோடிக்கு திட்டம் வந்துள்ளது. நாளுக்கு நாள் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பணிகளை செய்ய வேண்டி உள்ளது. விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். புதிய இடம் சிறிது காலத்திலேயே வளர்ச்சி அடையும். பஸ் ஸ்டாண்ட் அளவை குறைத்து கட்ட வாய்ப்பு இருக்காது. ஏற்கனவே மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல கட்ட அனுமதி பெற்று வந்துள்ளது. அளவை குறைத்தால் மீண்டும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.
அதிகாரிகளிடம் அமைச்சர் இது பற்றி கேட்ட போது தீர்மானம் நிறைவேற்றி டிடிசிபி அப்ரூவல் வாங்கி டெண்டர் விடுவது என்பது முடியாது. பல மாதங்கள் ஆகி விடும். வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் என தெரிவித்து விட்டனர். முடிவில் பஸ் ஸ்டாண்ட் கட்டிய பின் இடம் இருந்தால் மினி மார்க்கெட் கட்ட முடியுமா என பாருங்கள் என அதிகாரிகளிடம் கூறி விட்டு சென்றார்.

