/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டி வீடியோ எடுக்க எதிர்ப்பால் தகராறு
/
பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டி வீடியோ எடுக்க எதிர்ப்பால் தகராறு
பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டி வீடியோ எடுக்க எதிர்ப்பால் தகராறு
பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டி வீடியோ எடுக்க எதிர்ப்பால் தகராறு
ADDED : ஜன 03, 2025 11:36 PM
சிவகங்கை:சிவகங்கையில் அரசு பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டியை வீடியோ எடுப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டது.
சிவகங்கை மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டி நடந்தது. 230 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு போட்டி நடந்தது.
நேற்று மதியம் 12:00 மணிக்கு போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த சிலர் போட்டியில் பங்கேற்ற மாணவிகளை அலைபேசியில் 'வீடியோ' எடுத்தனர். இதற்கு ஆசிரியர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் வீடியோ எடுத்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். எஸ்.ஐ., செல்வபிரபு மற்றும் போலீசார் வீடியோ எடுத்தவர்களை கண்டித்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் தகராறில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லும்படி எச்சரித்து அனுப்பினர்.
வீடியோ எடுத்து தகராறு
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் கூறியதாவது: அரசு பள்ளி மாணவிகளுக்கான போட்டி நடக்கிறது. இதில் சிலம்ப கழகத்தை சேர்ந்த சிலர் அவர்களது மாணவிகளை சேர்க்கும் படி தெரிவித்தனர். இப்போட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டும் தான் என அவர்களிடம் தெரிவித்தோம்.
இதற்காக மாணவிகளை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். பின் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர் என்றார்.